கொச்சியில் களை கட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

கேரள மாநிலம் கொச்சியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.

கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமானது ஓணம். மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினத்தை ஓணம் பண்டிகையைாகவும், கேரள புத்தாண்டாகவும் மலையாள மொழி பேசுவோர் கொண்டாடுகின்றனர். பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த ஓணம் திருவிழா கேரளாவில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. கொச்சியில், பாரம்பரிய உடையணிந்த பெண்கள், 10 வகையான பூக்களைக் கொண்டு பிரமாண்ட அத்தப்பூ கோலமிட்டும், கை கொட்டி நடனமாடியும் மகிழ்ந்தனர். ஓணத்தின் மற்றொரு அம்சமாக விளங்கும் களி ஆட்டத்தில் பல்வேறு கடவுள்களின் வேடம் அணிந்த கலைஞர்கள், புலிக்களி, சுவடுக்களி நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் பாரம்பரிய இசை நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

Related Posts