கொடைக்கானலில்  காய்கறி ஏற்றி சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதி 2 பேர் பலி

கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்த வின்சென்ட் ஜெய பிரசாந்த், அதே பகுதியை சேர்ந்த நவீன் மற்றும் வினோத் ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனம் ஒன்றில் கொடைக்கானல் நகர்ப் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.  அப்போது அந்த வழியாக  காய்கறி ஏற்றி வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வின்சென்ட் ஜெயபிரசாந்த், வினோத் ஆகியோர் சம்பவ இட்த்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த  நவீனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனைத்தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை  கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்த்துறையினர் போராட்ட்த்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இதேபோல் தர்மபுரி மாவட்டம், குளியனூரிலிருந்து- ஏரியூர் பகுதிக்கு கட்டிடப்பணிக்காக  தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று எதிர்பாரதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கலா, கிருஷ்ணன்  ஆகியோர் சம்பவ இட்த்திலேயே உயிரிழந்தனர்.  காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

Related Posts