கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு

கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வரும் ரஹ்மத்துல்லா என்பவர் தனது உறவினரின் திருமணத்திற்காக குடும்பத்தாருடன் வத்தலக்குண்டுவுக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் கொடைக்கானலுக்கு திரும்பியுள்ளார். வெள்ளிநீர் வீழ்ச்சி அருகே அவரது வாகனம் கட்டுப்பாட்டினை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்த ரூபி, ராசிக் ஃபரித் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். காயமடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இருவரது உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக போலீஸார்அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Posts