கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

 

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 57-வது மலர் கண்காட்சியை, இன்று காலை 11 மணிக்கு பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து தோட்டக்கலை மற்றம் மலைப்பயிர்கள் துறை சார்பில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பில் ரோஜா தோட்டம் மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் 96 கோடி  ரூபாய் மதிப்பில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை   முதலமைச்சர் தொடக்கி வைத்தார். மேலும் சுமார் 78  கோடி  ரூபாய் மதிப்பீட்டில் 3,495 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்துரைக்கண்ணு,  வெல்லமண்டி நடராஜன்   மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். கொடைக்கானலில் மலர் கண்காட்சியை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் பல்வேறு வகையான மலர்கள் தொட்டிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பூங்கா முழுவதும் பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குவதை, சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Related Posts