கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்காவுக்கு சீனா வேண்டுகோள்

அணு ஆயுத சோதனைகளை கைவிட வடகொரியா ஒப்புக்கொண்டதை அடுத்து கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா மகிழ்ச்சியுடன் வாய்ப்பளிக்க வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

பாரிஸ் : மே-17

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அரசு முறை பயணமாக பாரிஸ் சென்றுள்ளார். அங்கு பேசிய அவர், அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதன் மூலம் வடகொரியா அமைதியை விரும்புவதாக தெரிவித்தார். அதற்கு இதர நாடுகளும் குறிப்பாக அமெரிக்கா, கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட மகிழ்ச்சியுடன் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Related Posts