கொலம்பியாவில் கவ்கா நதி மீது கட்டப்பட்டுள்ள அணை உடையும் அபாயம்

கொலம்பியாவில் கவ்கா நதி மீது கட்டப்பட்டுள்ள அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் 5 ஆயிரம் பேர் உடனடியாக தங்கள் இருப்பிடத்தை காலிசெய்யுமாறு அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

கொலம்பியா : மே-20

கொலம்பியாவின் ஆண்டிகுவா மாகாணத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு கட்டப்பட்டுள்ள இடுவாங்கோ அணையின் நீர்மட்டம் கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அந்த அணையின் கட்டுமானத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கவ்கா நதிக்கரையோரம் வசிக்கும் 5 ஆயிரம் பேர் உடனடியாக மாற்றிடங்களுக்குச் செல்லுமாறு கொலம்பிய அரசு கூறியுள்ளது.

Related Posts