கொல்கத்தா அணியை டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுப்மான் கில் 65 ரன்களும், ரஸ்ஸல் 45 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக ரிஷப் பன்ந் 46 ரன்கள் எடுத்தார்.

இதனால் டெல்லி அணி 18 புள்ளி 5 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 180 ரன்கள் எடுத்து 4 வது வெற்றியை பெற்றது. இதன் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்துக்கு முன்னேறியது.

Related Posts