கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் மற்றும் டெல்லி – பெங்களூரு அணிகள் மோதல்

ஐபிஎல் டி-20 தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில், கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் மற்றும் டெல்லி – பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

கொல்கத்தா : ஏப்ரல்-21

ஐபிஎல் டி20 தொடரில் இன்று மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ஆட்டங்களில், 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. 4 ஆட்டத்தில் 3 வெற்றிகளுடன் பஞ்சாப் அணி 6 புள்ளிகள் பெற்றுள்ள போதிலும் ரன்விகித அடிப்படையில் பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. இதனிடையே, ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு, டெல்லி அணிகள் தலா 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை மட்டு பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இரு இடங்களில் உள்ளன. இரு அணிகளுக்குமே இன்றைய ஆட்டம் தொடரில் மீண்டு வருவதற்கான வாய்ப்பாக கருதப்படுகிறது.

Related Posts