கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிப்பது யார்? என்பதை நிர்ணயிக்கும் லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

கொல்கத்தா : மே-15

ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. ஹைதராபாத் சன் ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஆப் தகுதி பெற்றுவிட்டன. எஞ்சிய 2 இடங்களை பிடிப்பதில் மற்ற அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 49-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் இதுவரை தலா 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்வி கண்டு 12 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கின்றன.

Related Posts