கோடநாடு வழக்கில் தீபு,பிஜின்குட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி: உதகை நீதிமன்றம் உத்தரவு 

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்கப்பட்டுள்ள சயான், மனோஜ், தீபு, பிஜின்குட்டி உள்ளிட்ட 10 பேர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். அப்போது அவர்கள், வழக்கு விசாரணையில் இருந்து தங்களை விடுவிக்குமாறு நீதிபதிகளிடம் மனு தாக்கல் செய்தனர்.

ஆனால் தீபு மற்றும் பிஜின்குட்டி ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், அதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related Posts