கோதாவரி ஆற்றில் மூழ்கிய 12 பேரின் உடல்கள் மீட்பு

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மேலும் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 60க்கும் மேற்பட்டோர் ஒரே படகில் சென்றனர். அப்போது பாரம் தாங்க முடியாமல் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதில் படகில் பயணம் செய்த 60 பேரும் நீரில் மூழ்கினர். விபத்து குறித்து தகவலறிந்து சென்ற மீனவர்கள் மற்றும் மீட்பு படையினர் 17 பேரை உயிருடன் மீட்டனர். நீரில் மூழ்கி உயிரிழந்த 13 பேரின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டனர். மற்றவர்களின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கிடைக்காமல் உள்ளவர்களின் உடல்களை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

Related Posts