கோபிசெட்டிபாளையத்தில் கோழிப்பண்ணை இடிந்து விழுந்ததில் 1,000 கோழிகள் பலி

ஈரோடு அருகே கோபிசெட்டிபாளையத்தில் சூறை காற்றுடன் பெய்த கனமழையில் கோழிப்பண்ணை கட்டடம் இடிந்து விழுந்ததில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன.

ஈரோடு : மே-24

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொலவக்காளிபாளையம், கடுக்கம்பாளையம், ஒட்டகுதிரை ஆகிய பகுதிகளில் நேற்று இரவு கடும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. பொம்மநாயக்கன்பாளையத்தில் கோழிப்பண்ணை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டம் ஆனதில், அங்கு வளர்க்கப்பட்டு வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழந்தன. அதே பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட பட்டுபுழு வளர்ப்புமையங்களும் சூறை காற்றால் சேதமாயின. பொலவக்காளிபாளையத்தில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடத்தின் மீது மரங்கள் சாய்ந்து சேதமானது. கிராமப்புறங்களில் ஏராளமான வாழைமரங்களும் முறிந்து விழுந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Related Posts