கோபிசெட்டிபாளையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கோபிசெட்டிபாளையத்தில், நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி மற்றும் வைரவிழா மேல்நிலைப்பள்ளி இணைந்து ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். பேரணியில் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என்றும் பாதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த பேரணியானது,  கச்சேரி ரோடு பெரியார் திடல் வழியாக கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையத்தை வந்தடைந்தது. முன்னதாக இந்த பேரணியை கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையர் தாணுமூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.  கோபி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தியாகராஜன், வைரவிழா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மற்றும் என்.சி.சி பயற்சியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனா்.

Related Posts