கோலாலம்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 26 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 5 பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த போது 750 கிராம் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் 5 பயணிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் விலை 26 லட்சம் ரூபாயாகும்.

Related Posts