கோலாலம்பூர் – சிங்கப்பூர் இடையே புல்லட் ரயில் திட்டம் ரத்து

கோலாலம்பூர் நகருடன் சிங்கப்பூரை இணைக்கும் 350 கிலோ மீட்டர் தூர புல்லட் ரயில் திட்டத்தை ரத்து செய்வதாக மலேசிய பிரதமர் மஹாதிர் முஹம்மது தெரிவித்துள்ளார்.

மலேசியா : மே-29

மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, புதிய பிரதமராக பதவியேற்ற மஹாதிர் முஹம்மது, சுமார் 2500 கோடி அமெரிக்க டாலர் அளவிலான கடன் சுமையில் மலேசிய அரசு சிக்கியுள்ளதாக தெரிவித்திருந்தார். இதனால், முன்னாள் பிரதமர் நஜீப் ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களை ரத்து செய்யப் போவதாகவும் அவர் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், கோலாலம்பூர் நகருடன் சிங்கப்பூரை இணைக்கும் 350 கிலோமீட்டர் தூர புல்லட் ரயில் திட்டத்தை ரத்து செய்வதாக மஹாதிர் முஹம்மது தெரிவித்துள்ளார். இந்த புல்லட் ரயில் திட்டத்திற்கு, 1,400 கோடி அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts