கோவையில் நர்சிங் கல்லூரிகளுக்கு நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டிகளில் கன்னியாகுமாரி,தஞ்சை மாவட்ட அணிகள் வெற்றி

கோவையில் நர்சிங் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கான மாநில அளவிலான தடகள போட்டிகள் கடந்த மூன்றாம் தேதி துவங்கின. இதில் ஈரோடு, நாமக்கல், நாகர்கோவில், திருவண்ணாமலை, பெரம்பலூர், திண்டுக்கல், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 100 மீட்டர் முதல் 1,500 மீட்டர் வரையிலான ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், கம்பு ஊன்றி தாண்டுதல் என்று 15 வகையான போட்டிகள் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற தடகள போட்டிகளின்  நிறைவு விழா  பி.பி.ஜி.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கன்னியாகுமாரி மற்றும் தஞ்சை மாவட்ட அணிகள் வெற்றி பெற்றன. கல்லூரி குழுமங்களின் தலைவர் மருத்துவர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில் கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

Related Posts