கோவையில் 1 கோடியே 76 லட்சம் பணம்,துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல்

மக்களவைத்  தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிர வாகனச் சோதனை நடைபெற்று வருகிறது.  உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்  கோவை சங்கனூர் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர்  வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சிங்காநல்லூர் வரதாராஜபுரம் பகுதியில் உள்ள ஏடிஎம்களில்  பணம் நிரப்பச் சென்ற  சேப் கார்டு ரைட்டர் என்ற தனியார் நிறுவனத்தின் வாகனத்தை சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ஒரு கோடியே 76 இலட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யபட்டது. மேலும் பாதுகாப்பு ஊழியர்  சச்சின்குமாரிடம் இருந்த உரிமம் இல்லாத துப்பாக்கி மற்றும் ஐந்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யபட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.  .உரிய ஆவணங்களை சமர்பித்த பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Related Posts