கோவை அரசு மருத்துவமனையில் அதிநவீன குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மையம் துவக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் தினந்தோரும் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் உடல் நலம் சரி இல்லாமல் அனுமதிக்கபட்டு வருகின்றது .இம்மருத்துவமனையில் போதுமான சிகிச்சை பிரிவு இல்லாத காரணத்தினால் நாளொன்றுக்கு 5 குழந்தைகள் பலியாகின்றன.குழந்தைகளின் உயிர் பலியை தடுக்கும் வகையில் கோவை சேட்லைட் ரோட்டரி கிளப் சார்பாக 1 கோடி மதிப்புள்ள அதிநவீன குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுகளை மருத்துவமனையின் முதல்வர் அசோகன் திறந்து வைத்தார். இப்பிரிவில் தனியார் மருத்துவமனையின் வசதிக்கு நிகராக குழைந்தைகளுக்கென 16 படுக்கை வசதி மற்றும் 8 வெண்டிலேட்டர் பயன்பாட்டிற்கு வைத்தனர். அதிக வசதி கொண்ட சிகிச்சை பிரிவு உள்ளதாகவும் அடுத்த ஆண்டில் 25லட்சம் மதிப்புள்ள ரத்த சோகை மைய்யம் திறக்கப்பட போவதாகவும் ரோட்டரி கிளப் தலைவர் தெரிவித்தார். இதில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன், ரோட்டரி கிளப் தலைவர் சரவணன் மற்றும் செவிலியர்கள் மருத்துவர்கள் என ஏரளமனோர் கலந்துகொண்டனர்.

Related Posts