கோவை அருகே கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாகக்கூறி பொது மக்கள் முற்றுகை

கோவையில் இருந்து கேரளாவை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி ஒன்றறை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள சோதனைச்சாவடி அருகே  பொதுமக்கள்  சுற்றுவளைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது ஓட்டுனர் பிரகாஷ் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் லாரியில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக வதந்தி பரவியது. இதையடுத்து அப்பகுதியைச்சேர்ந்த  நூற்றுக்கணக்கானோர்  கன்டெய்னர் லாரியை  முற்றுகையிட்டனர். தகவலறிந்த வந்த காவல்துறையினர் ஓட்டுனர் பிரகாஷிடம் விசாரணை நடத்தினர். அப்போது லாரிக்குள் டீத்தூள் பாக்கெட்டுகள் இருப்பதாக ஓட்டுனர் பிரகாஷ் கூறியுள்ளார். ஆனால் அதனை நம்ப மறுத்த பொதுமக்கள் கண்டெய்னரில் உள்ள பெட்டிகளை தங்கள் முன் திறந்துகாட்ட வேண்டும் என்று கோரினர். இதையடுத்து பொதுமக்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.  ஆனால் கலைந்து செல்ல மறுத்த பொதுமக்கள் மீது  காவல்துறையினர் தடியடி நட்த்தியதால் பதற்றம் ஏற்பட்ட்து. இதைத் தொடர்ந்து லாரியை  காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

Related Posts