கோவை அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 5 பேர் பலி

கோவை அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் பசீர் என்பவர் தனது பெண் பணியாளர்  உட்பட ஐந்து பேருடன் நேற்று இரவு கன்னியாகுமரிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.  கோவை பைபாஸ் சாலை அருகே சென்று கொண்டிருந்த காரின் மீது,  எதிரே பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில்,  காரில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த பெண் உட்பட  3 பேரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் தகவலறிந்து சம்பவ இட்த்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts