கோவை அருகே 149 கிலோ தங்க கட்டி பறிமுதல் : பறக்கும்படையினர் அதிரடி சோதனை

கோவை சவுரிபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த வாகனங்களை சோதனை செய்தனர். பிரிங்க்ஸ் நிறுவனத்தின்ர், தனது ஏழு வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 149 கிலோ எடையிலான தங்க கட்டிகளை எடுத்துச் சென்றது. அதற்கான உரிய ஆவணங்களை வாகனத்தில் வந்தவர்கள் சமர்ப்பிக்காததையடுத்து தங்க கட்டிகளுடன் வாகனத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவற்றை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனிடையே தங்கநகை உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்ட நகையை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் 25க்கும் மேற்பட்ட தங்கநகை உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மேலும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்க நகையை மீட்டுக் கொள்ளலாம் என கூறிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கவே வருமானவரித்துறை அதிகாரிகள் உடனடியாக விரைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்நிறுவன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related Posts