கோவை குனியமுத்தூர் பகுதியில் விமரிசையாக நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகம்

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ தேவி,  ஸ்ரீ நிவாச பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள் நடைபெற்றதையடுத்து, புனித கலச நீர் விமானங்கள் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் தெளிக்கப்பட்ட தருணத்தில் திருக்கோவில் வானத்தில் கருடன் சுற்றியதை கண்ட  பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு பரவசமடைந்தனர். இதனை தொடர்ந்து பெருமாளுக்கு புத்தாடை சாற்றி அபிஷேக திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்று, அனைவருக்கும் தீபாராதனை காட்டப்பட்டது.

Related Posts