கோவை நகரம் மதவெறி மற்றும் தனியார்மயம் நோக்கி தள்ளப்பட்டுள்ளதே சீரழிவிற்கு காரணம்: திருமுருகன் காந்தி 

கோவை வி.கே.கே.மேனன் சாலையில் மே 17 இயக்கம் சார்பில் தமிழ்நாட்டின் உரிமைகளை காப்போம் என்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சி என நம்ப முடியாது என தெரிவித்தார். கோவையின் சுவர்களில் தாமரை சின்னம் இருப்பது அவமானம் எனவும், சுவரில், மனதில், வரலாறில் இருந்து தாமரை சின்னம் அகற்றப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார். மேலும் கோவை நகரம் மதவெறியால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது எனவும், கோவை நகரம் மதவெறி மற்றும் தனியார்மயம் நோக்கி தள்ளப்பட்டுள்ளதே சீரழிவிற்கு காரணமெனவும் அவர் தெரிவித்தார். ராமர் கோவில் விவகாரம் இந்துத்துவா அமைப்புகளின் கற்பனை சினிமா எனவும், பாஜக கோவிலை பற்றி மட்டுமே பேசும் எனவும் கூறிய அவர், வளர்ச்சியை நம்பி மோடிக்கு வாக்களித்தவர்களுக்கு நாமம் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Related Posts