கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில தினங்களில் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்து பகுதிகளிலும் வாக்கு பதிவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு முன்கூட்டியே வாக்களிக்கும் தபால் வாக்குப்பதிவானது நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், கோவை பாராளுமன்றத் தொகுதியில் தபால் வாக்குப்பதிவானது கோவை அவிநாசி சாலையில் உள்ள csi பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 980 காவலர்களும் 212 ஊர்காவல் படையினரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

Related Posts