கோவை மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், தேர்தலில் வெற்றி பெற்றால் கோவை மக்க்களவைத்  தொகுதியில் செயல்படுத்த உள்ள நலத் திட்டங்களை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டார். கோவை சௌரியபாளையம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்ட சிறுகுறு தொழில்முனைவோர் சங்கத்தின் நிர்வாகிகள் பாண்டியன், மூர்த்தி  பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சௌரியபாளையம் பகுதியை சேர்ந்த வியாபாரிகளும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Posts