கோவை மருதமலையில் சுற்றித்திரியும் காட்டுப் பன்றிகள்-பொதுமக்கள் அவதி

கோவை மருதமலை பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் காட்டுப் பன்றிகளால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். காட்டுப்பன்றியை பார்க்கும் சில இளைஞர்கள் அதன் அருகே நின்று செல்பி எடுத்து வருவதால் திடீரென பன்றிகள் தாக்கும்அபாயமும் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts