கோவை மருத்துவ மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்யவில்லை

கோவை பிஎஸ்ஜி கல்லூரி மருத்துவ மாணவர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி, ஒரு மாணவர் மீது ஆள்மாறாட்ட சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு கல்லூரி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. தேர்வு அனுமதிச்சீட்டு புகைப்படத்திற்கும், தற்போதைய புகைப்படத்திற்கும் முரண்பாடு இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.

ஆனாலும் சான்றிதழ்களில் பழைய புகைப்படத்தை ஒட்டியிருப்பார்கள் என்பதால் மீண்டும் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்,  புகைப்படத்தில் சற்று மாறுதல் இருப்பதால் ஆள்மாறாட்டம் என்ற முடிவுக்கு வர முடியாது என்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராணபாபு தெரிவித்திருந்தார். இந்நிலையில், நீட் ஆள்மாறாட்டப் புகாரில் சிக்கிய கோவை பிஎஸ்ஜி கல்லூரி மருத்துவ மாணவர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை என்பது உறுதியாகி உள்ளது என மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts