கோவை மாணவி படுகொலை, கோபத்தை ஏற்படுத்துகிறது:கமல்ஹாசன்

கோவை நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருக்கு பிரச்சாரம் மேற்கொள்ள கோவை விமான நிலையம் வந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு மாணவி படுகொலை செய்யப்பட்டிருப்பது வருத்தத்தை விட கோபத்தை அதிகம் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். அதிகப்படுத்த வேண்டிய பாதுகாப்பை குறைத்து கொண்டு வருகிறது இந்த அரசு என அவர் குற்றம்சாட்டினார். 

காவல் துறை ஏவல் துறையாக செயல்படுகிறது என்றும் சமுதாய மாற்றங்களையும் திருத்தங்களையும் தாம் தான் ஏற்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக் காட்டினார். 

50 லட்சம் ஏழைகளுக்கான திட்டங்களை தாங்கள் வைத்திருக்கிறோம் என்றும் தங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பின் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா செய்வார்கள் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். 

தண்ணீர் கூட கொடுக்க முடியாத அரசாக இந்த அரசு உள்ளதாகவும், விரைவில் மாற்றங்கள் உருவாகும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Posts