சசிகலாவின் ஆலோசனைப்படி அமமுக-வில் முடிவுகள் எடுக்கப்படுகிறது:தங்க தமிழ்செல்வன்

சசிகலாவின் ஆலோசனைப்படியே அமமுக-வில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டு வருவதாக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.  .

சென்னை அசோக்நகரில் அமமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விரைவில் கட்சியாக பதிவு செய்யப்பட உள்ளது எனவும்,  கட்சியாக பதிவு செய்யப்பட்ட பிறகு, சசிகலா தலைவராக இருப்பார் எனவும் கூறினார். துணைத் தலைவரை கட்சியின் பொதுக்குழு கூடி  தேர்வு செய்யும் எனவும்,  அமமுக-வின் பொதுச்செயலாளராக டிடிவி. தினகரன் நியமிக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.  சசிகலாவின் ஆலோசனைப்படியே அமமுக-வில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் எஞ்சியுள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  தங்க. தமிழ்ச்செல்வன் கூறினார்.

Related Posts