சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அதனை அமமுகவுடன் இணைப்போம்:  டிடிவி தினகரன் 

சென்னை கே.கே.நகரில் உள்ள அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சி நிர்வாகிகள் தன்னை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கூறினார். மேலும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததுபோல் தன்னுடைய கட்சியினை  பதிவு செய்ய உள்ளதாகவும் கூறினார். சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அதனை அமமுகவுடன் இணைத்து விடுவோம் என்றும் அவர் கூறினார்.

Related Posts