தமிழ்நாடு

சசிகலா சொத்துக்களை முடக்கியுள்ளதாக தகவல்

சசிகலாவுக்கு சொந்தமான ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2017 ஆம் ஆண்டு நவம்பரில் ஆப்பரேஷன் கிளீன் மணி என்ற பெயரில் ச சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தியது. இதில், பினாமி சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாகவும், கார் ஓட்டுநர்கள், வீட்டுப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் பெயர்களில் புதிய சொத்துகள் வாங்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சென்னை, கோவை உள்ளிட்ட 9 இடங்களுக்கு சொந்தமான தற்காலிக சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags
Show More

Related News

Back to top button
Close