சட்டசபையில் இருந்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

ஆளுநர் ஆய்வு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்காததால், சட்டசபையில் இருந்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை : ஜூன்-27

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று பேசினார். அப்போது, அரசின் தலைமைச் செயலாளரிடம் சொல்லிவிட்டு ஆளுநர் ஆய்வுப் பணிக்கு செல்கிறரா? இல்லையா? என்று கேள்வி கேட்ட  மு.க.ஸ்டாலின், இது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் ஏதும் அளிக்காமல் மவுனமான இருந்தார். இதனால், அதிருப்தி அடைந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதேபோல், ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் பதிலளிக்காததைக் கண்டித்து, காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

Related Posts