சட்டபேரவை சபாநாயகராக விஸ்வேஸ்வர் ஹெக்டே தேர்வு

கர்நாடகா சட்டபேரவை சபாநாயகராக விஸ்வேஸ்வர் ஹெக்டே தேர்வு செய்யப்பட்ட நிலையில்அவர் இன்று பதவியேற்கிறார்.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்த நிலையில், கடந்த 26-ந் தேதி எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு அமைந்தது. இதனிடையே நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றதும், சபாநாயகர் ரமேஷ்குமாரும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதற்கான ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை செயலாளரிடம் அவர் ஒப்படைத்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு பாஜக எம்.எல்.ஏ.வான விஸ்வேஸ்வர் ஹெக்டே வேட்புமனு தாக்கல் செய்தார்.

விஸ்வேஸ்வர் ஹெக்டேவை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று கர்நாடகா சட்டபேரவையின் புதிய சபாநாயகராக விஸ்வேஷ்வர ஹெக்டே பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளன.

Related Posts