சட்டப்பேரவையில் ஆளுநர் குறித்து பேசவே கூடாது என்று விதிகளை மாற்றியது தி.மு.கதான்

சட்டப்பேரவையில் ஆளுநர் குறித்து பேசவே கூடாது என்று விதிகளை மாற்றியது தி.மு.கதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை : ஜூன்-26

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூய்மை இந்தியா திட்டத்தை விளம்பரப்படுத்தவே மாவட்டம் தோறும் ஆளுநர் செல்வதாகவும், ஆட்சி அதிகாரத்தில் அவர் தலையிடுவது இல்லை என்றும் தெரிவித்தார். ஆளுநர் பற்றி சட்டப்பேரவையில் நேற்று விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஆளுநர் குறித்து சட்டப்பேரவையில் பேசக்கூடாது என்று 1999ஆம் ஆண்டில் தி.மு.க.தான் விதிகளை மாற்றியது என கூறினார். உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி – ரொனால்டோ இடையே தான் போட்டி உள்ளதோ, அதுபோல தமிழக தேர்தல் களத்தில் அதிமுக – திமுக இடையே தான் போட்டி உள்ளது என்று கூறிய ஜெயக்குமார், தமிழக அரசியலில் இடையில் நுழைந்துள்ள யாராலும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று தெரிவித்தார்.

Related Posts