சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

தமிழக ஆளுநரின் ஆய்வுப் பணிகள் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை : ஜூன்-25

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஆய்வுப் பணிகளை தடுத்தால் 7 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்று ஆளுநர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் இன்று சட்டசபையில் எதிரொலித்தது. ஆளுநரின் ஆய்வு குறித்து பேசுவதற்கு சட்டசபையில் அனுமதி அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர் தனபால் ஆளுநர் குறித்து அவையில் பேசுவதற்கு அனுமதி இல்லை என கூறினார். சபாநாயகரின் பதிலில் திருப்தி அடையாத தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

Related Posts