சட்டமன்றபேரவை உறுப்பினர் கருணாசுக்கு  பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல்

சட்டமன்றபேரவை உறுப்பினர் கருணாசுக்கு  பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

      அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு  வெற்றி பெற்ற கருணாஸ்   அ. தி.மு.க அரசை விமர்சித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.  இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அ.தி.மு.க சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவர் தனபாலிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பேரவைத் தலைவர் தனபால் சட்டத்துறை அமைச்சர் சண்முகத்துடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து கருணாசுக்கு  தனபால் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  முதல்வருக்கு எதிராக பேசியது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கருணாஸ் விவகாரம் தொடர்பாக முதல்வரும், துணை-முதல்வரும் இன்று காலை சபாநாயகரை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Posts