சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில், வீட்டுமனைபட்டா, முதியோர் உதவிதொகை, பசுமை வீடுகள் உள்ளிட்ட 17 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், 10 ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த டி.டி.வி தினகரனுக்கு மக்களை பற்றி ஒன்றும் தெரியாது எனவும், மக்களை பற்றி படித்த பின்பு அரசியலை எதிர்கொள்ளட்டும் எனவும் தெரிவித்தார். பொது இடங்களில் எப்படி பேசவேண்டும் என தெரியாத சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை சுட்டிகாட்டிய அமைச்சர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.மத்திய அரசுடன் தமிழக அரசு நல்லுறவுடன் செயல்பட்டு வருவாதக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Related Posts