சட்டமன்ற உறுப்பினர் மகேசை கட்சியிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி அதிரடி அறிவிப்பு

கர்நாடக பகுஜன் சமாஜ் சட்டமன்ற உறுப்பினர் மகேசை கட்சியிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டசபையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சர் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. கொல்லேகல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான மகேஷ் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துக் கொண்டு குமாரசாமி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மகேஷ் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.இதையடுத்து தனது சுட்டுரைப்பதிவில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் நீக்கப்படுவதாக மாயாவதி அறிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க கட்சி தலைமை உத்தரவிட்ட நிலையில்,  மகேஷ் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts