சட்டமன்ற தேர்தலை நோக்கி மக்கள் நீதி மய்யம் பயணம் : மகேந்திரன்

2021 ஆம் ஆண்டு  சட்டமன்ற தேர்தலை நோக்கி மக்கள் நீதி மய்யம் பயணிப்பதாக அக்கட்சியின் மாநில துணை தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளார்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் இருக்கும் உண்மை இறுதியாக மக்களுக்கு தெரியவரும் என்றார் அவர்.

முன்னதாக மக்கள் நீதி மையத்தின் வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் புதிய கட்டமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் வேலூரில் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர் மகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் மவுரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Posts