சட்டீஸ்கரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலி

சட்டீஸ்கர் மாநிலம், கல்லாரி மற்றும் போராய் காட்டுப்பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அந்த பகுதியை துணை ராணுவப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  தம்தாரி மாவட்டம் செம்மேடா கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதி அருகே இன்று அதிகாலை வீரர்கள் சென்றபோது,  அந்த பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில்  சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த பகுதிக்கு கூடுதல் படை அனுப்ப்ப்பட்டுள்ளது.

Related Posts