‘சண்டக்கோழி 2’ படத்தின் டிரைலர் வெளியீடு

விஷால் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் ‘இரும்புத்திரை’ படத்தை கொண்டாடி வரும் ரசிகர்களுக்கும் மேலும் ஒரு விருந்தாக மற்றொரு படத்தின் டிரைலரை வெளியிட்டிருக்கிறார்.

சென்னை : மே-11

நடிகர் விஷால் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘இரும்புத்திரை’. மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், விஷால் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான ‘சண்டக்கோழி 2’ படத்தின் டிரைலரும் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த டிரைலரும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது. நடிகர் விஷால் ஒரே நாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளித்திருக்கிறார்.

 

 

Related Posts