சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரிஅம்மன் குண்டம் திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். 

ஈரோடு : ஏப்ரல் – 03

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று அதிகாலை 4 மணி அளவில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து வந்த பக்தர்கள் பங்கேற்றனர். இன்று அதிகாலை 3 மணியளவில் அம்மன் சப்பரம் தெப்பக்குளத்திற்கு சென்று பின்னர் 3.45 மணியளவில் குண்டத்தின் முன்பு வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து, கோயில் பூசாரி ராஜேந்திரன் குண்டத்தின் முன்பு கற்பூர ஆரத்தி காட்டியபின் குண்டம் இறங்கியதை அடுத்து, வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.

Related Posts