சத்தீஷ்கர் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

தயே புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதையடுத்து  சத்தீஷ்கர் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

                ஒடிசா மாநிலத்தில் நேற்று அதிகாலை தயே புயல் கரையை கடந்ததையடுத்து அங்கு கனமழை பெய்து வருகிறது. கனமழையினால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் சாலைகள் மற்றும் ரெயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும் புயலால் தகவல் தொடர்பு வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் பல மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்ட போதும், வெள்ளநீர் சூழ்ந்துள்ள மல்கான்கிரி, ஒடிசா மாநிலத்திலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தயே புயல் அடுத்ததாக சத்தீஷ்கர் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களை மிரட்டி வருகிறது. நேற்று அதிகாலை தயே புயல் கரையை கடந்த போதும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால், சத்தீஷ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலுல் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் கனமழை பெய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts