சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

வங்கக் கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கார் மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் மழையால், அங்குள்ள கெலோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்று நீரானது ஊர்களுக்குள் புகுந்ததால் சாலைகள் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  முடங்கியுள்ளது. மத்தியப்பிரதேசம் மண்ட்சாரில் கனமழை கொட்டித் தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. சில இடங்களை நீச்சல் போட்டு கடக்க வேண்டிய சூழலும் நிலவுகிறது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Related Posts