சத்தீஸ்கர் மாநில வனப்பகுதியில் நடந்த கடும் துப்பாக்கி சண்டையில், 2 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவோயிஸ்டுகள் பதுங்கியிருக்கும் பகுதிகளில், உள்ளூர் போலீசாருடன் சிறப்பு அதிரடிப்படை மற்றும் மாவட்ட ரிசர்வ் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேடுத்ல் வேட்டையில்  ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மாவட்டம் கொண்டராஸ் வனப்பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் சிறப்பு அதிரடிப்படை மற்றும் மாவட்ட ரிசர்வ் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  அப்போது, அவர்களை நோக்கி மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்குமிடையே நடைபெற்ற கடும் துப்பாக்கி சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சண்டை நடைபெற்ற இடத்தில் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இன்றைய தேடுதல் வேட்டையில், மாவட்ட ரிசர்வ் படையின் பெண் அதிரடி படையினரும் இடம்பெற்றிருந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா தெரிவித்தார்.

Related Posts