சத்ய நாராயணராவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்

முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்த தமது சகோதரர் சத்ய நாராயணராவை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்ய நாராயணராவுக்கு, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில், முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் தர்பார் படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூரில் இருந்த ரஜினிகாந்த், பெங்களூருவுக்கு சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சத்ய நாராயணாவை சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவர்களுடன் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Related Posts