சத்ருகன் சின்கா பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்

நடிகர் சத்ருகன் சின்கா வாஜ்பாய் அரசில் மத்திய அமைச்சராக இருந்தவர். 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் பீகாரின் பாட்னாசாகிப் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து கூறிவந்தார். இந்நிலையில் இம்முறை பாட்னாசாகிப் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட சத்ருகன் சின்காவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இதனால் அதிருப்தியில் இருந்த அவர் சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியைச் சந்தித்துப் பேசினார்.

சைத்ரநவராத்திரி தொடக்க நாளில் தான் காங்கிரசில் சேர உள்ளதாகவும் தெரிவித்தார். அதன்படி இன்று டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால், செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா ஆகியோர் முன்னிலையில் சத்ருகன் சின்கா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

Related Posts