சந்திரயான்-2 நிலவில் தரை இறங்குவதை மோடியுடன் 60 மாணவ-மாணவிகள் நேரில் பார்வையிட திட்டம்

வரும் 7ந் தேதி சந்திரயான்-2 நிலவில் தரை இறங்குவதை பிரதமர் நரேந்திர மோடியுடன் 60 மாணவ-மாணவிகளும் நேரில் பார்வையிடுகின்றனர்.

இஸ்ரோ நிறுவனம் சந்திரனில் ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திரயான்-2 செயற்கைகோளை கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைகோள் தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. வருகிற 7-ந் தேதி அதிகாலை 1.55 மணிக்கு இந்த செயற்கைகோள் நிலவில் தரை இறங்குகிறது. சாதனை முயற்சியான இந்த நிகழ்வை நாடே ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியை பெங்களூரு இஸ்ரோ தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக பார்வையிடுகிறார். பிரதமர் மோடியுடன் சேர்ந்து 60 மாணவ-மாணவிகளும் இந்த நிகழ்ச்சியை நேரடியாக பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

Related Posts