சந்திரயான் 2-யை அடுத்து சூரியனை ஆராய இஸ்ரோ திட்டம்

அடுத்த ஆண்டு  முதல் ஆறுமாதத்தில் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-வை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான்-2 வெற்றிகரமாக புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார். சந்திரயான் விண்கலம் சரியாக நிலவில் தரையிறங்கினால் அது யாருமே செய்யாத சாதனையாக இருக்கும் என குறிப்பிட்ட அவர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதத்தில் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார். சந்திரன் தென் பகுதியில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அவர் கூறினார்.

சந்திரயான் -2 திட்டம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவேறினால், அடுத்ததாக சந்திரயான் -3 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும் என அவர் தெரிவித்தார்.  நிலாவுக்கு சென்று, தரையிறங்கி, அங்குள்ள மண், பாறை மற்றும் தனிமங்களை சேகரித்து மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் மாபெரும் திட்டமே சந்திரயான் -3 என சிவன் கூறினார்

Related Posts