சந்திரயான் 2 விண்கலத்தின் 2-வது முறையாக சுற்று வட்டப்பாதை அதிகரிப்பு

சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 2-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலாவின் தென்பகுதியை ஆராய்ச்சி செய்ய சந்திரயான் 2 என்ற விண்கலத்தை கடந்த திங்கட்கிழமையன்று இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

புவி வட்டப் பாதையில் இயங்கி வரும் விண்கலத்தின் உயரம் கடந்த இரு நாட்களுக்கு முன் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் 2-வது முறையாக சுற்று வட்டப்பாதையின் உயரம் மேலும் அதிகரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சுமார் 883 விநாடிகள் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகளைத் தொடர்ந்து விண்கலம் 54 ஆயிரத்து 829 கிலோ மீட்டர் உயரத்தைத் தொட்டுள்ளது.

ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் புவிட்டப் பாதையில் இருந்து விலகி, ஆகஸ்ட் 20 ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திராயன் 2 விண்கலம் பயணிக்க தொடங்குகிறது.

Related Posts